சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் ஆசிரியர் தினத்தன்று குமாரி அதித்தி நரசிம்மன் நாட்டிய அரங்கேற்ற விழா மிக பிரமிக்க வைத்தது திருமதி பவித்ரா சீனிவாசன் லக்ஷ்மி நரசிம்மன் ராமானுஜம் அவர்கள் மகளாகிய அதித்தி நரசிம்மன் புனேவில் படித்து வருகிறார் சென்னையில் உள்ள சரஸ்வதி நாட்டியாலயா பள்ளி நிறுவனர் டாக்டர் தாரணி ராமகிருஷ்ணன் அவர்களிடம் இணையதளம் வழியாக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நாட்டியம் பயின்றுள்ளார். இவர் மாநிலம் மற்றும் இந்திய அளவிலும் சர்வதேச போட்டிகளிளும் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பத்ம விபூஷன் டாக்டர் பத்மா சுப்ரமணியம் மற்றும் பத்மவீபூஷன் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் பங்கேற்று கவுரவித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சரஸ்வதி நாட்டியாலயா சிஷ்யர்களும் மற்றும் குமாரி அதித்தி நரசிம்மன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நாட்டிய ஆர்வலர்கள் கலந்து மகிழ்ந்து பாராட்டினர். தொடர்ந்து செய்தியாளரிடம் தெரிவித்த திருமதி பவித்ரா சீனிவாசன் கூறுகையில் குரு டாக்டர் தாரணி ராமகிருஷ்ணன் அவர்கள் மிக அன்பானவர்கள் அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை குழந்தைகள் மீது அன்பு கொண்டவர் இப்படி ஒரு குருவை பார்க்க முடியாது என்றும் அப்படிப்பட்ட குரு என் மகளுக்கு கிடைத்தது எங்கள் பாக்கியம் என்றும் சரஸ்வதி நாட்டியாலயா பள்ளி நிறுவனர் டாக்டர் தாரணி அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சரஸ்வதி நாட்டியாலயா பள்ளி நிறுவனர் குரு டாக்டர் தாரணி ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் பரதநாட்டியத்தில் குரு என்றால் எங்களுக்கு பத்மா சுப்பிரமணியம் தான் எங்கள் அழைப்பை ஏற்று அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கௌரவித்ததற்கு நன்றி என்றும் குமாரி அதித்தி நரசிம்மன் மிக சிறந்த மாணவி என்றும் எங்களிடம் இணையதளம் மற்றும் நேரிலும் நாட்டியத்தை பயின்று சர்வதேச அளவில் சாதனைகள் புரிந்து எங்கள் பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் என தெரிவித்தார் நாட்டியத்தில் வர்ணம் மிக முக்கியமானது மாசான வர்ணத்தில் இன்று மிக அருமையாக பல்வேறு நாட்டியக் கலை முன்னிறுத்தும் விதமாக அவருடைய நாட்டிய அரங்கேற்றம் இருந்தது என்று தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டிய கலை ஆர்வலர்கள் பல்வேறு முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?