திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேதய ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் இக் கோயிலின் அறங்காவலர்கள் நந்தகுமார் பிரவின் குமார் ஒருங்கிணைப்பில் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீதேவி பூதேவி சமேதய ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி 14 9 2025 ஞாயிற்றுக்கிழமை ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுவதினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் விருச்சகம் லக்னத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதய ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கும் விமான கோபுரத்திற்கும் மற்றும் ஸ்ரீ கருடர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் மஹா அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் திருவள்ளூர் மாவட்ட சேர்மன் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் எல்லாபுரம் வடக்கு யூனியன் செயலாளர் பி ஜே மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி அருளாசி பெற்றனர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் கோயில் குருக்கள் கூறியது ஸ்ரீதேவி பூதேவி சமேதய ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றதாகவும் கோயில் ஆனது சுமார் 26 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் இந்த கும்பாபிஷேகம் இரண்டாவது கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது இந்த கிராம மக்களின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றக்கூடிய நாளாக இந்த நாள் அமையும் அனைத்து மக்களுக்கும் பெருமாள் அனைத்து சுப காரிய நிகழ்ச்சிகளும் இன்னும் மென்மேலும் வளர அனைத்து வல்லமைகளும் வழங்குவார் அதே போன்று இந்த கும்பாபிஷேகத்தை மிக சிறப்பாக ஒருங்கிணைத்து வழி நடத்திய தலைவர் நந்தகுமார் பிரவீன் குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் அனைவருக்கும் பெருமாள் எப்போதும் துணையாக இருப்பார் என தெரிவித்தார். இந்த மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள் ஆனந்த் செட்டியார் லதா நந்தகுமார் ரமேஷ் குமரவேல் அப்போலோ சுப்ரமணியம் பாலாஜி ரவி காசி விஸ்வநாதன் நடராஜ் சசிரேகா கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai