சென்னை சிந்தாதிரிப் பேட்டை தமிழ்நாடு ஏ ஐ டி யு சி தமிழ்நாடு அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்-
எ ஐ டி யு சி மாநிலச் செயற்குழு கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலபொதுச் செயலாளர் தனசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில பொருளாளர் கோவிந்தன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஏ ஐ டி யூ சி தேசிய செயலாளர் D. M. மூர்த்தி, ஏ ஐ டி யூ சி மாநிலச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு டாஸ்மார்க் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து பேசிய ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் கூறியது 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமலும்,3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய தொகுப்பூதியமும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனை அளிக்கிறது மேலும்
எங்களுடைய முக்கியமான கோரிக்கை பணிநிரந்தரம், மருத்துவ சிகிச்சைக்காக இ எஸ் ஐ யில் சேர்க்க வேண்டும். மேலும் டாஸ்மாக் விற்பனையில் கூடுதலாக காலி
பாட்டிலை திரும்ப வாங்கசொல்வது மிகவும் கடினமான வேலையாகும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி காந்திஜெயந்தி அன்று சென்னையில் எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் மாரி,
பி மணிகண்டன், செல்வம், உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?