ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் ஆனந்த நிலையத்தில் 27 9 2025 சனிக்கிழமை அன்று56 ஆவது ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை மஹா உற்சவம் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 28 9 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மஹா பெரியவா மகிமை, 29 9 2025 அன்று திங்கட்கிழமை பக்த பிரகலாத சரிதம் நடைபெறும் என்றும் 30 9 2025 செவ்வாய்க்கிழமை அன்று சீனிவாச கல்யாணம் உபன்யாசம் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து 1 10 2025 பக்தி பாடல்கள் நடைபெறும் என்றும் 2 10 2025 அன்று நாம சங்கீர்த்தனம் நடைபெறும் என்றும் 3 10 2025 அன்று புரட்டாசி சிரவணம் திருமஞ்சனம் நடைபெறும் என்று தெரிவித்தனர் இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் தலைவர் தம்மினேனி பாபு அவர்கள் தெரிவித்தார். மேலும் அக்டோபர் 4 10 2025 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணி அளவில் கருட சேவா புறப்பாடு நடைபெறும் தொடர்ந்து 5 10 2025 அன்று சென்னை பெரம்பூர் கல்கி ரங்கநாதன் மாண்ட் போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 8:30 மணி முதல் 12 45 வரை திருக்கல்யாண வைப உற்சவம் நடைபெறும் என்றும் இந்த நிகழ்வில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க வேண்டும் என தெரிவித்தனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య