2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த தொடக்கப்பள்ளியில் காலி பணியிடங்களை முழுவதும் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்,சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நடைபெற்றது.
தமிழகத்திலிருந்துஆயிரத்திற்கும் மேற்பட்டஇடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு, விடியா திமுக அரசுக்கு எதிராக
கோஷங்களை எழுப்பினர் …
அப்பொழுது செய்தியாளிடம் பேசிய இந்த கூட்டமைப்பின் மாநில தலைவர்
பார்த்திபன்…
கடந்த 13 ஆண்டுகளில் நான்கு தகுதி தேர்வுகளையும்,ஒரு நியமன தேர்விலும் எழுதி தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மொத்தம் 24 ஆயிரம் பேர் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் நிலையில்,கடந்த ஜூலை மாதம் வெறும் 2457 ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த விடியா திமுக அரசு பணி நியமனம் வழங்கி இருப்பது,வெறும் கண்துடைப்பு என குற்றம் சாட்டினார், மேலும்
கடந்த 13 ஆண்டுகளில் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருந்தும் நியமன தேர்வில் எழுதி வெற்றி பெற்று காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்குபணி நியமனம் செய்வதாக 110 விதியின் கீழ் அறிவித்துவிட்டு தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டினார்.
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை விடியா திமுக அரசு உடனடியாக நிறைவேற்றாவிடில்,தங்களின் அடுத்த கட்ட போராட்டம் அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai