சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் எஸ் கே பி டி மற்றும் டிரஸ்ட் மூலம் நடைபெற்ற மஹா ரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி ஸ்கூல் பதினோராவது விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் டிவி ராம குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் அவர்கள் கலந்துகொண்டு வரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் விளையாட்டு போட்டியில் மிகப்பெரும் சாதனை படைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் பி. சுப்பிரமணியம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும் எஸ் கே பி டி அறக்கட்டளையின் தேசு லட்சுமி நாராயணா, எஸ் எல் சுதர்சனம் சி ஆர் கிஷோர் பாபு தாத்தா பத்ரிநாத் மற்றும் எஸ் கே பி டி அறக்கட்டளையின் செயலாளர் எம் கிஷோர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளை வழங்கி கௌரவத்தினர்.
மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மேலாளர் ஸ்ரீ லதா உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்த விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் கராத்தே மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இப் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் மிகச் சிறப்பாக விளையாடியது அனைவரையும் உற்சாகமூட்டும் வகையில் அமைந்திருந்தது.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?