.சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி
நிலை குழு கணக்கு மற்றும் தணிகை தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான க.தனசேகரன் அவர்கள் தலைமையில் டாக்டர்கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 4000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சிறப்பு வரலாற்றினை எடுத்துரைத்தார் மேலும் திராவிட முன்னேற்ற ஆட்சியின் போது தலைவர் கலைஞர் அவர்கள் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்த மாபெரும் தலைவர் கலைஞர் என புகழாரம் சூட்டினார் மேலும் சென்னை தெற்கு மாவட்டத்தில் தொடர்ந்து மகளிர் மாநாடு கூட்டம் போலவே க தனசேகரன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளர், கடந்த காலங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்க உயர்நீதி மன்றத்தில் ஆணைபெற்று வழங்கியவர்தான் இந்த தனசேகரன் என்று பாராட்டு தெரிவித்தார்.
அவர் நடத்தும் நிகழ்ச்சியில் எந்த விதத்திலும் குறை கூற முடியாத அந்த அளவிற்கு மிகச்சிறப்பான முறையில் செய்து காட்டுவார்
மேலும் இந்த அரசு மகளிர்க்கான சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து செய்துவரது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மக்களுக்காக வழங்கி வருகிறார். வருகின்ற 2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று இந்த ஆட்சி தொடரும்,
அப்போது தமிழக மக்கள் இதைவிட அரசின் நல்ல திட்டங்களை மிக அதிக அளவில் பெற்று பயன் அடைவார்கள் என்று கூறினார்.
மேலும் இந்த மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கழக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், கலைஞர் நகர் வடக்கு பகுதி செயலாளர்மு.ராசா எம் சி, கலைஞர் தெற்கு பகுதி செயலாளர் கே கண்ணன் எம்.சி,அணிகளின் மாவட்ட தலைவர்கள் ஹாஜி. எஸ்.அபுபக்கர்,சுப. முத்துவேல், பகுதி அவைத்தலைவர் எஸ் கமலக்கண்ணன், மாவட்ட பிரதிநிதி டி எஸ் பி தென்னரசு,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி தனசேகரன், 129வட்டக்கழக செயலாளர் எஸ் பாஸ்கரன், 129 (அ) வட்ட கழக செயலாளர் ஆர்.பாபு, பகுதி கழக பொருளாளர் து.ரஞ்சித் குமார் உட்பட கலைஞர் நகர் வடக்கு,தெற்கு பகுதி கழகநிர்வாகிகள்தொண்டர்கள், மகளிர் அணி சார்ந்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య