4வது யூத் கேம்ஸ் நேஷனல் சாம்பியன்ஷிப் 2025
12, 13, 14 தேதிகளில் நவம்பர் அன்று பெடகம் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ், மாப்சா – கோவாவில் நடைபெற்றது
கோவாவில் நடைபெற்ற Youth Games National Championship 2025 போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கேற்றனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து ஐந்து வயது முதல் 18 வயது வரை உள்ள திறமையான இளம் வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பான போட்டித்திறனை வெளிப்படுத்தினர்.
மொத்தமாக 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று நாட்கள் நடைபெற்ற கால்பந்து, கபடி, கராத்தே, வாலிபால், சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் திறனையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
இந்த தேசிய சிலம்ப போட்டியில் சென்னை – தமிழ்நாடு சார்ந்து வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டது.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த VRTS Silambam Martial Arts Academyயின் 11 மாணவர்கள் சிலம்பம் பிரிவில் பங்கேற்று,
11 பேரும் 11 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் இந்த ஆண்டு சிலம்பம் பிரிவில் சென்னை – தமிழ்நாடு மொத்த சாம்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியுடன் திரும்பும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ள நவம்பர் 15 இரவு 9.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பயிற்சியாளர்கள் நிவேதா ரித்தீஷ் கண்ணா ஆகியோர் செய்தியாளரிடம் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் விளையாட்டுத் துறைக்கு மிக முக்கியம் கொடுத்து வளர்த்து வருகின்றனர் மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவி்த்தனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?