March 7, 2026

இந்திய ரயில்வே துறையில் ஏறத்தாழ 2.50000 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது என SRMU துணைச் செயலாளர் ஈஸ்வர்லால் தெரிவித்தார்.

லோகோ பைலட்டுகளுக்கு எதிராக கொண்டு.வந்துள்ள திட்டங்களை மறு சிரய்வு செய்ய வேண்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் எஸ் ஆர் எம் யூ சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது

2016 ஆண்டு நடைமுறைக்கு வந்த ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை படி D.A.50 சதவீதம் தாண்டியவுடன் எல்லா சலுகைகளும் 25 % உயர்த்தப்பட வேண்டும் என்பது பரிந்துரை ஆனால் இந்த முறை 14 சலுகைகளில் 13 சலுகைகள். கொடுத்த இந்த இரயில்வே நிர்வாகம் லோகு பைட்டுகள் இருக்கிற 25 சதவீதத்தில் கொடுப்பதை மறுத்து வருகிறார்கள்

இது ஒரு தேவையற்ற முயற்சி லோகோ பைலட்டுகளின் பொறுமையினை சோதிக்கிற முயற்சியாக இருக்கிறது இது அநியாயமானது இதோ நிலை நீடிக்குமே ஆனால் இந்த நாட்டில் ரயில்வே ஓடுவது கேள்விக்குறியாக மாறும் இவ்ளோ நாள் பேச்சுவார்த்தையில் நிறைவேறாத இந்த கோரிக்கை இன்றைக்கே அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டமாக நடைபெறுகிறது சென்னை, மதுரை ,திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு , சேலம் ஆகிய கோட்டங்களில் நடைபெறுகிறது

இந்த போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் இதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

சென்னை ரயில்வே முழுவதும் ஏறத்தாழ 5200 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4700 பேர் தான் வேலை செய்கிறார்கள் மிதி காலியிடங்களாக உள்ளது

இந்திய ரயில்வே துறையில் ஏறத்தாழ 2.50000 (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம்) காலிப்பணியிடங்கள் உள்ளது சதன் ரயில்வேயில் 15000 காலிப்பணியிடங்கள் உள்ளது ரயில்வே நிறுவத்தால் நடத்தப்படும் தேர்வு சரியான முறையில் நடக்காததால் இவ்வளவு வேலை காலியக உள்ளது

இந்த அரசாங்கம் ஓட்டுகளுக்காக தேர்தலுக்கு தேர்தல் காலிபணியிடங்கள் நிறப்பப்படும் என அறிவிப்பு வெளியிடுகிறார்கள் தவிர வேறு எதையும் செய்யவில்லை காலிப்பினியிடங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதில் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது என தெரிவித்தார்.

இதில் 100ற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பேட்டி:
ஜி ஈஸ்வரலால்
துணை பொதுச்செயலாளர் SRMU

About Author