சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை இல்லத்தில் பாரத் ரத்னா டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசன சட்டத்தை இன்று 26 11 2025 காலை 10 மணி அளவில் சுங்கத்துறை எஸ்சி எஸ்டி எம்ப்லாயிஸ் வெல்பர் அசோசியேஷன் சார்பில் துணைத் தலைவர் ஆதிலட்சுமணன் பொருளாளர் எம் எஸ் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இந்திய அரசியல் சாசன தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறை சார்பில் துணை ஆணையர் என் மோகன் இணை ஆணையர் ஜிகே ராதாகிருஷ்ணன் மற்றும் ரமேஷ்பாபு முனிசாமி இந்திரா சசிரேகா பிரேமா மாசி, சங்கர், செந்தில் வேல், முருகன், புலிக்கண் கண்ணதாசன் மஞ்சுளா ஜெஸ்சந்த உள்ளிட்ட அசோசியேஷன் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களுடைய திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் இந்திய தேசத்திற்கு மட்டும் சட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தந்த சட்டத்தை இன்று வரை அதனை பின்பற்றி வருகின்றனர் அனைத்து சமுதாயத்தினருக்கும் ஏற்கும் வகையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக உருவாக்க இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் தேவைப்பட்டன நவம்பர் 26″ 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது இந்தச் சட்டத்தை இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது மேலும் சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களை போற்றுவிதமாக இன்று இந்திய அரசியல் சாசன சட்ட நாள் கொண்டாடப்பட்டது.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య