நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா உலகப் பிரசித்தி பெற்றது இத்தர்காவிற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத் தர்காவில் 469வது ஆண்டாக கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

அதனை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள கொடி மரத்தில் 200 வது ஆண்டாக கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு திருவிழா சந்தனம் பூசுதல் 30 11 2025 அன்று சென்னை சாம்பஜார் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஃப்சேட்டு அவர்கள் முன்னிலை வகித்தார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் அ. அக்கரம் கான் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத் தலைவர் கே சி ராஜா
எம் சி டி என் தலைவர் சி ராஜா பொதுச் செயலாளர் ஹாஜி எஸ் சலாவுதீன் பொருளாளர் வாஹித் பாஷா தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தின் மாநில பொருளாளர் சையது கெளஸ் செய்தி தொடர்பாளர் எஸ் முகமது அசார் நிர்வாகிகள் மற்றும் சாம்பஜார் மார்க்கெட் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சந்தனக்கூடு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த நிகழ்வில் ஜாதி மதம் மொழி இனம் வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி இந்த சந்தனக்கூடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


More Stories
கிங் மேக்கரின் முப்பெரும் விழா 20 ஆண்டுகள் நிறைவு செய்து 21வது ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side