சென்னை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியில் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப் பாளர்கள் பி. கே. சிவகுமார், வி.மகேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 35மேற்பட்ட சங்கங்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஒருங்கிணைப் பாளர்கள் பி. கே. சிவக்குமார் வி.மகேந்திர குமார் கூறுகையில்
அரசுத் துறையில் 12 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இருந்தும் அரசுத் துறையில் பல காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்ற பணியாளர்களை வைத்து பணி செய்ய வைப்பது மிகவும் வேதனைக் குரியதாகும் அரசு இதனை உடனடியாக சரி செய்யவேண்டும்.
எங்களுக்கு வழங்கப்படுகின்ற மருத்துவ காப்பீட்டில் பெற்றோரையும் அரசு இணைத்திட வேண்டும்.
அரசு விடுமுறை நாட்களில் பணி செய்ய ஆணை இடுவதை தவித்திட வேண்டும்.
அலைபேசி வாயிலாக பணி செய்ய கூறுவதும், நேரம் கடந்து பணி செய்ய வைப்பதும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
பொதுக் கோரிக்கையாக சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்.
2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட போராட்டத்தில் ஒரே குடையின் கீழ் இருந்ததைப் போல் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து தமது கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது என தெரிவித்தனர்
மேலும்13.12.25 திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் 18 அம்ச முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளோம் என தெரிவித்தார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.