March 7, 2026

தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் 163 வது ஜெயந்தி விழா பாரத் இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் 163 வது ஜெயந்தி விழா பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னை சென்ட்ரல் அல்லிகுளம் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் ரத்ததான முகாம் நிகழ்வில் பாரத் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ஆர் டி பிரபு அவர்கள் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தர் அவர்களின் 163 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்த தானம் வழங்கினார் இந்த மாபெரும் ரத்ததான முகாமில் அல்லி குளம் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பாரத் இந்து முன்னணியின் தலைவர் ஆர் பி பிரபு அவர்கள் கூறியது ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் பாரத் இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வருவதாகவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லி குளம் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் அது மட்டும் அல்ல பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா எப்போதும் நாம் அதனை பின்பற்ற வேண்டும் அந்த வகையில் நம்முடைய பாரத் இந்து முன்னணி தொழிற்சங்க நிர்வாகிகள் நாகராஜ் மற்றும் துரை உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தனது சார்பில் நன்றினை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்

About Author