
CHENNAI: ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அகத்தர உறுதி அமைப்புக்குழு மற்றும் கலாலயா நுண்கலை சங்கத்தின் சார்பில், ஆகஸ்டு 12.08.2025(செவ்வாய்க்கிழமை) மற்றும் 13.08.2025 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள், கல்லூரி மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் *ESHA கலாச்சார விழா நடத்தப்பட்டது.
அந்த வகையில், ஆகஸ்டு 13.08.2025(புதன்கிழமை) அன்று, கல்லூரி மாணவியர் குழுக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மேடையில், குழுவாக பாடுதல், இசைக்கு ஏற்ப ஆடுதல், திரைப்படங்களுக்கு ஏற்ப நடை நடத்தல், குழுவாக ஆடுதல் என பலவகையான போட்டிகளுடன் கலாச்சார நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்சிகளில் நடுவர்களாக ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று இசைத்துறையில் இசைக்கலைஞராகவும், நடனத்துறையில் நடன இயக்குனர்களாகவும், திரைத்துறையில் நடிகையாகவும் சிறந்துவிளங்கும் மேநாள் மாணவியர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கல்லூரித் தாளாளர் ஸ்ரீ வூட்டுக்குரு சரத்குமார் அவர்கள், பொருப்பு முதல்வர் முனைவர் பி.பி.வனிதா அவர்கள், துணை முதல்வர் முனைவர். எம். வி. நப்பின்னை அவர்கள், அகத்தர உறுதி அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. பரணி குமாரி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மேடையை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது.


More Stories
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா
SRM School of Law Adds 35 New Faculty Members in a Major Push towards Internationalisation
SRM Institute of Science and Technology Organized International Conference on Human Capital Management