சென்னை, ஜூன் 28, 2026: முதியோர் உறைவிட பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளையும் (Assisted living) ஒருங்கிணைத்து வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ‘அதுல்யா சீனியர் கேர்’ (Athulya Senior Care)முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், முதியோர் மருத்துவப் பராமரிப்பிற்காகவே (Geriatric care) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனது முதல் மருத்துவமனையான ‘அதுல்யா ஜெரியாட்ரிக் கேர் ஹாஸ்பிடல்’ (Athulya Geriatric Care Hospital) கிளையைச் சென்னையின் வளசரவாக்கத்தில் இன்று தொடங்கியது. முதியோர் பராமரிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவிருக்கும் இந்த மையம், அதுல்யா நிறுவனத்தின் பிரத்தியேக முதியோர் மருத்துவமனைப் பராமரிப்பு, முதியோர் ஆதரவு இல்லங்கள் மற்றும் உறைவிடப் பராமரிப்பு (Home Care) ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் முதியோருக்கு 360° கோணத்தில் முதியோருக்கு முழுமையான சேவையை வழங்குகிறது.

இந்த அதிநவீன மருத்துவ மையத்தைத் தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (Thiru. Rajendra Vishwanath Arlekar, Hon’ble Governor of Tamil Nadu) அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண் (Dr. Karthik Narayan, Founder and Managing Director, Athulya Senior Care), நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (திரு. ஸ்ரீநிவாசன் ஜி (Mr. Srinivasan. G, Founder and CEO, Athulya Senior Care), மற்றும் நிறுவனரும் இயக்குநருமான திருமதி. கிருஷ்ணா காவ்யா (Miss. Krishna Kavya, Founder and Director, Athulya Senior Care) ஆகியோருடன் மருத்துவ வல்லுநர்கள், முதியோர் பராமரிப்பு நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) கணிப்புப்படி, இந்தியாவில் முதியோர்களின் மக்கள் தொகை 2031-ம் ஆண்டிற்குள் 19.34 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த பிரத்தியேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் முதியோர்களுக்கென சுமார் 4,00,000 மருத்துவப் படுக்கைகள் தேவைப்படும் நிலையில், வெறும் 20,000 படுக்கைகள் மட்டுமே நாடு முழுவதும் கிடைக்கின்றன. அதேபோல், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முதியோர் உறைவிடப் பராமரிப்புஇல்லங்களின் (assisted living) எண்ணிக்கையும் தேசிய அளவில் 4,500-க்கும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 1 கோடி பேர் இருக்கும் வேளையில், முதியோர்களுக்கான பிரத்தியேக மருத்துவ உள்கட்டமைப்பில் உள்ள இந்த மாபெரும் இடைவெளியை இனி நாம் புறக்கணிக்க முடியாது என்பதை இப்புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
அதுல்யா ஜெரியாட்ரிக் கேர் மருத்துவமனை, 10-க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிபுணத்துவ மருத்துவர்களின் துணையோடு விரிவான பன்னோக்குமருத்துவச் சேவைகளை வழங்குகிறது. இதில் முதியோர் தீவிர சிகிச்சை (Geriatric Intensive Care), எலும்பியல் மற்றும் மறுவாழ்வுச் சிகிச்சை (Orthopedics & Rehabilitation), பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை (General & Laparoscopic Surgery), நரம்பியல் (Neurology), சிறுநீரகவியல் (Urology) மற்றும் மனநல மருத்துவம் (Psychiatry) ஆகிய துறைகளுக்கான பிரத்தியேக சிறப்புச் சிகிச்சை மையங்கள் (Centres of Excellence) அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கார்டியாலஜி, ஆன்காலஜி, நெப்ராலஜி மற்றும் மறுவாழ்வு மருத்துவம் (cardiology, oncology, nephrology, rehabilitation medicine) உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் நிபுணர்களை ஒருங்கிணைத்து, முதியவர்களின் இருக்கும்சிக்கலான மற்றும் மாறிவரும் ஆரோக்கியத் தேவைகளுக்கு ஏற்றவகையில் ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்பை இம்மருத்துவமனை வழங்குகிறது.
இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறை, முதியவர்களுக்கு ஏற்படும் பலதரப்பட்ட தொடர் இணை நோய்கள் (Multi-morbidity), நாள்பட்ட நோய்களின் மேலாண்மை, பாதிப்பிலிருந்து குணமடைதல், மறுவாழ்வு மற்றும் நீண்ட காலப் பராமரிப்புத் தேவைகளைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கான தற்காலிக சிகிச்சையாக இல்லாமல், முதியவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பு (Continuity of care) கிடைப்பது அதுல்யா ஜெரியாட்ரிக் கேர் ஹாஸ்பிடலால் உறுதி செய்யப்படுகிறது.
இந்த புதிய மருத்துவமனையின் தொடக்கம் குறித்து அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. ஸ்ரீநிவாசன் ஜி. (Mr. Srinivasan G., Founder & CEO, Athulya Senior Care) பேசுகையில், “பல ஆண்டுகளாக அதுல்யா நிறுவனம் முதியோர் ஆதரவு இல்லங்கள், உறைவிடப் பராமரிப்பு மற்றும் இடைக்காலப் பராமரிப்புச் சேவைகள் (transitional care services) மூலம் மிகவும் வலுவான முதியோர் நல்வாழ்வுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. எங்களின் பிரத்தியேக முதியோர் மருத்துவமனையின் இந்தத் தொடக்கம், அந்த தொலைநோக்குப் பார்வையின் அடுத்தக்கட்டமாக அமைந்திருப்பதோடு மிகவும் அவசியமான ஒரு விரிவாக்கமாகும்; இது முதியோர்களுக்கான எங்களது ஒட்டுமொத்தப் பராமரிப்புச் சேவையை முழுமையாக்குகிறது. முதியவர்களுக்கு அளிக்கப்படும் தற்காலிகச் சிகிச்சைகளைத் தாண்டி, அவர்களை நலனை கண்காணிக்கும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு, மீண்டு வருவதற்கான மறுவாழ்வுசிகிச்சைகள், பாதுகாப்பு மற்றும் முதியோர் மருத்துவ நிபுணத்துவம் ஆகியவை தேவைப்படுகின்றன. நாங்கள் சேவை செய்யும் ஒவ்வொரு முதியவரின் கண்ணியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பேணிப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் இம்மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இம்மையத்தின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண் (Dr. Karthik Narayan, Founder and Manging Director, Athulya Senior Care) கூறுகையில்,“முதியவர்களின் மருத்துவத் தேவைகள் பெரும்பாலும் சிக்கலானவை; அவற்றுக்குப் பாரம்பரிய சிகிச்சை முறைகளைத் தாண்டிய ஒரு புதிய பராமரிப்பு மாதிரி தேவைப்படுகிறது. முறையான முதியோர் பராமரிப்பு என்பது அவர்களின் மருத்துவ நிலைமை, இயல்பான உடல் இயக்கம், நோயிலிருந்து குணமடைதல், அறிவாற்றல் மீதான ஆரோக்கியம் (Cognitive health) மற்றும் நீண்ட காலப் பராமரிப்புத் தேவைகள் உள்ளிட்ட பல பரிமாணங்களைக் கையாள்வதை உள்ளடக்கியதாகும். அதுல்யா ஜெரியாட்ரிக் கேர் மருத்துவமனை மூலம், பிரத்தியேக உள்கட்டமைப்பு, முதியோர் மருத்துவ நிபுணத்துவம் மற்றும் பல்துறை மருத்துவக் குழுக்களின் ஆதரவுடன் ஒரு சிறப்பு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. இம்மையம் முதியோர் மருத்துவத்தில் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகள், பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளின் நேர்மறையான முடிவுகள் மற்றும் முதியோர்களுக்கான உயர்தரப் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
தமிழ்நாடும் ஒட்டுமொத்த இந்தியாவும் இதுவரை இல்லாத அளவிலான முதியோர் மக்கள் தொகை உயர்வைச் சந்திக்கத் தயாராகி வரும் வேளையில், அதுல்யாவின் இந்த முதியோர் மருத்துவமனை ஒரு முக்கிய மருத்துவ மைல்கல்லாக அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் தங்களின் சிகிச்சை வடிவமைப்புகளில் முதியவர்களின் தேவைகளுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்பதற்கான ஒரு முக்கிய அழைப்பாகவும் திகழ்கிறது.


More Stories
JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai
ORA Senior Care Opens in the Heart of ChennaiIntroducing a New Standard in Premium Senior Living
Ilaya Thilagam Prabhu Ganesan and Malavika Mohanan Unveil New Kalyan Jewellers Showroom in Chennai