சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி தனது 2″வயது குழந்தையுடன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் லோகேஷ் என்ற நபரை காதலித்து 2021 ல் திருமணம் செய்து கொண்டார்,
வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த லோகேஷ் – தனலட்சுமி தம்பதியினர்.
4 ஆண்டுகள் மட்டுமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக தெரிகிறது. தன் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே கணவர் லோகேஷ்க்கு விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது..
லோகேஷும் காதலி மகாலட்சுமியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவராக தெரிகிறது.
மனைவி தனலட்சுமி எவ்வளவு எடுத்துக் கூறியும் லோகேஷ் தன் காதலை தொடர்ந்து உள்ளார். ஒரு கட்டத்தில் காதலி மகாலட்சுமி தன் காதலன் லோகேஷ் உடன் இருக்கும் ஆபாச வீடியோக்களை தனலட்சுமிக்கு அனுப்பி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாகவும் ..
இது சம்பந்தமாக தாம்பரம் காவல் ஆணையத்ற்க்கு உட்பட்ட சேலையூர் காவல் நிலையம், சிட்லப்பாக்கம் மகளிர் காவல்நிலையம், பீர்க்கன்கரணை காவல் நிலையங்களில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி
“SOCIAL JUSTICE FOR INTERNATIONAL ANTI CRIME ASSOCIATION ணை சேர்ந்த
•Sam பிரவீன்
•பிரமிளா S குமார்
- சாந்தி
ஆகியோர் உதவியுடன்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து தன் நிலை குறித்து தெரிவித்தார்…
இது சம்பந்தமாக CIVIL & HUMAN RIGHTS COUNCIL OF INDIA
Sam பிரவீன் அவர்கள் பேசுகையில் இந்தப் பாதிக்கப்பட்ட பெண் தனலட்சுமி இரண்டு வருடங்களாக மேலே குறிப்பிட்டுள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்து போராடி வருகிறார், ஆனால் காவல்துறையினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை
கடந்த ஆட்சியில் தான் இந்த நிலை என்றால் தற்போது வந்திருக்கும் ஆட்சியிலும் இதே நிலை தொடர்வது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.


More Stories
இளைஞர்களிடையே இணையவழி துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் குறித்த விழிப்புணர்வு
தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவுத் தீர்வு: தமிழகத்தில் முறைப்படி செயல்பாட்டைத் தொடங்கியது BJMC
Twin Eagles Hosur lift Cavin’s TNPPL Season 2 title; DYSSC equips the podium as Official Paddle Partner