சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம்வேர்ல்டு விஷன் இந்தியா என்ற சர்வதேச கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து 600க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக பீட்டர் ஜோயல், சுனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி 600க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தார்கள். இதற்கு காரணம் FCRA Cancel ஆகிவிட்டது என்று சொன்னார்கள்.
2022 ஆம் ஆண்டு நவம்பரில் தான் FCRA cancel ஆகி உள்ளது.
என்றும் பணி செய்த எங்களுக்கு 7 மாதமாக இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.
800 கும் மேற்பட்ட பணியாளர்கள் ப இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள். எல்லாரும் தன் ஊரைவிட்டு வெளியில் பணியாற்றி வருகிறார்கள், தற்போது செய்த பணிக்கு ஊதியம் கூட வழங்கவில்லை. என்றும்
இது குறித்து கேட்டால் காவல்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள், நாங்கள் பேசுவதற்கு வாய்ப்புகூட கொடுக்கவில்லை. எங்களுக்கு வேறு பணியும் கிடைக்க வில்லை.உடல்நிலைசரியில்லாத வீட்டில் உள்ள சொந்தங்களை கவனிக்க முடியவில்லை, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கூட முடியாத சூழல் உள்ளது. எங்களை சேர்ந்தவர்களில் இருவர் இறந்து விட்டார்கள்.
20 மாநிலங்களில் 100 கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அதனால் காவல் துறையில் புகார் கொடுக்க முடியாத சூழல் உள்ளது.நாங்கள் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க முயன்றால் மனதளவில் புண்படுத்து கிறார்கள். ஆகையால் நாங்கள்
இங்கு தொழிலாளர் நலத்துறையில் புகார் கொடுத்துள்ளோம்.
எங்களை பணிநீக்கம் செய்துபின் பணியாளர்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்ததை பார்த்தோம் என்றார்.ஆகையால் எங்களுக்கு சேரவேண்டிய சம்பளம் பாக்கியினை கிடைக்க தொழிலாளர் நலத்துறை மூலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai