சென்னை எழும்பூரில் சம்பள உயர்வு, பணி நேர குறைப்பு, பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆப்பரேட்டர்கள் நலச்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.
15 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆபரேட்டர்ஸ் நல சங்கம் சார்பாக இன்று நடைபெற்ற பேரணியில் ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆப்பரேட்டர்கள் பலர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆபரேட்டர்ஸ், தமிழகத்தில் மிகவும் ஆழமான மலைகள் நோண்டப்படுகின்ற பள்ளங்களில் வேலை பார்ப்பதாகவும் ஆபரேட்டர்ஸ்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை பலருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் குவாரியில் வேலை செய்யக்கூடிய ஆப்பரேட்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதோடு அடிப்படை 36000 ஆகவும் வேலை நேரத்தை 8 மணி நேரமாகவும் மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆப்பரேட்டர்கள் நலச்சங்க நிறுவன தலைவர் சாமி செல்வமுத்து தெரிவித்தார்.
பேட்டி: சாமி செல்வமுத்து, நிறுவனத் தலைவர்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?