அம்பத்தூர் கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்து அப்பகுதி மக்களுக்கு மாற்றிய இடம் அளித்திட வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பத்தூர் ஜெயமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க வழக்கறிஞர் சக்திவேல் தேசிய முற்போக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம் எல் ரவி வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் ஜனநாயக மகளிர் கட்சி தலைவர் அம்மு ஆறுமுகம் வழக்கறிஞர் நஞ்சு ஈஸ்வரன் தமிழக முற்போக்கு கட்சி செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் வழக்கறிஞர் பி. சோபன் பாபு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மகளிர் பிரிவின் செயலாளர் காஞ்சனா தேசிய மக்கள் சக்தி தலைமை நிலை செயலாளர் தனசேகரன் மது ஒழிப்பு போராளி சுந்தர் மற்றும் முத்தமிழ் நகர் ஆறுமுகம் ரமேஷ் ஒரு லிட்டர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க சக்திவேல் தேசிய முற்போக்கு மக்கள் சக்தி தலைவர் எம் எல் ரவி ஆகியோர் இணைந்து செய்தியாளரை சந்தித்தனர் அப்போது கூறி அவர்கள் அம்பத்தூர் கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த மக்களை அப்பகுதியில் இருந்து அப்புற படுத்தியது கண்டிக்கத்தக்கதாகும் எனவே தமிழக அரசு நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் அமைத்து அமைச்சு தர வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர் தொடர்ந்து காலம் தாழ்த்தும் பட்சத்தில் எங்களுடைய போராட்டம் தீவிரப் படுத்தப்படும் என தெரிவித்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai