வாக்ஸ் குழுமத்தின்
வாக்ஸ் விருட்சம் அறக்கட்டளை சார்பாக 18 – வது நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வின் போது வாக்ஸ் அறக்கட்டளை வாயிலாக 600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் பார்வையற்ற பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்விக்கான நிதியுதவி வழங்கியது.
வாக்ஸ் அறக்கட்டளை இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது.
வாக்ஸ் குழுமத் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழும இயக்குநர்கள், கவிதா இராவணன் மற்றும் இந்திரஜித் இராவணன் ஆகியோர் கல்வி உதவித்தொகைகான காசோலைகளை வழங்கினர் .
மேலும் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழக முதலமைச்சரின் தனிச் செயலாளரருமான
இராஜரத்தினம், முன்னாள் ரோட்டரி கவர்னரும் எமரால்ட் பதிப்பகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒளிவண்ணன்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
வாக்ஸ் அறக்கட்டளை ஒரு இலாப நோக்கமற்ற ஏழை எளிய மக்கள், கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உயர்தர கல்வி கிடைப்பதற்காக பாடுபடும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.
வாக்ஸ் குழுமம், ஆண்டுதோறும் தனது குழும நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்குகிறது.
பிரபல தொழிலதிபர், வள்ளல் சோ. ஞானசுந்தரம் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் அவரின் அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையிலும்
அவரது புதல்வர் வாக்ஸ் குழுமத்தின் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் வாக்ஸ் அறக்கட்டளையை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி நிறுவனர் தினத்தை கொண்டாடுகிறார்.
வாக்ஸ் நிறுவனர் தினத்தின் நோக்கமே தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறுதுணையாக நின்று அவர்கள் கல்விக்கு உதவி வழங்குவதே ஆகும்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 நபர்களுக்கு உணவு வழங்கினர்.
வாக்ஸ் அறக்கட்டளை இதுவரை 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?