சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்காக பணியாற்றும் Geo India Foundation, Green Run 2025 என்ற பெயரில் ஒரு தனித்துவமான பசுமை விழிப்புணர்வு ஓட்டம் (Eco-Themed Marathon) நடந்தேறியது. இந்த நிகழ்வு, பொதுமக்களில் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் YMCA மைதானம், நந்தனம், சென்னையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினர் திரு. எம். அஷ்வின்,IRTS Deputy Development Commissioner, MEPZ, வர்த்தக அமைச்சகம், இந்திய அரசு, கௌரவ விருந்தினர் திருமதி அம்மு ஜெயராஜ் ஐஆர்எஸ், வருமான வரி துணை ஆணையர் பெனாமி தடை பிரிவு சென்னை, திரூ. கே. அசோக் மண்டல பொது மேலாளர், கெயில் (இந்தியா) லிமிடெட், சென்னை, திரு. பி. ஆசிர் பாண்டியன் பொதுச் செயலாளர் தலைமை நிர்வாக அதிகாரி ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் நிருபர் செயலாளர் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி, திரு. முகேஷ் கார்க், நிர்வாக இயக்குனர் ரம்போல் இந்தியா, திரு. சுவாமி பிரேம் அன்வேஷிஜி நிறுவனர் அன்வேஷி அறக்கட்டளை, பிரபல விருந்தினர் நடிகை பார்வதி நாயர் மற்றும் திருமதி பிரியா ஜெமிமா, நிறுவனர் ஜியோ இந்தியா அறக்கட்டளை ஆகியோர் 3 km & 5 km பசுமை விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
• மரம் நடுதல், தூய்மை பராமரிப்பு, மற்றும் பசுமை வாழ்வை ஊக்குவிக்கும் நிகழ்வு
• பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்
• பங்கேற்பாளர்களுக்கு T-Shirt, மெடல், மற்றும் இனிமையான பரிசுகள்
• சுற்றுச்சூழல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு சாவடிகள்
Geo india Foundation நிறுவனர் திருமதி பிரியா ஜெமிமா கூறுகையில்,
“Green Run என்பது ஓர் உடற்பயிற்சி நிகழ்வை விட உயர்ந்தது; இது நம் பசுமை பூமிக்கான பொறுப்புணர்வை எழுப்பும் ஒரு இயக்கமாகும்.”
இந்த நிகழ்வுக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் CSR திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கின்றன.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?