தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று எளிமை ஆளுமை என்ற மகத்தான திட்டத்தை வகுத்துத் தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் லயன் சீதாராமன் அவர்கள் கூறுகையில் எங்களுடைய பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று 14 7 2025 காலை 10 மணி அளவில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராமாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கும் அரசு அலுவலங்களிலும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து கிண்டி ஆதம்பாக்கம் டி நகர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மற்றும் முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர் அதுமட்டுமல்ல தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விரைவில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டிய தமிழக முதல்வர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் இதுவரை யாரும் செய்திடாத நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமாக பாராட்டு விழாவை தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர் வி சுப்பையா சங்கத்தின் மாநில பொருளாளர் கார்த்திக் மற்றும் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் மற்றும் தியாகராய நகர் பகுதி தலைவரும் செயற்குழு உறுப்பினருமான கணேஷ் மற்றும் அம்பத்தூர் மற்றும் முகப்பேர் பகுதி தலைவரும் செயற்குழு உறுப்பினருமான லயன் ஜெயஸ்ரீ மனோகரன் மற்றும் ராமாபுரம் பகுதி தலைவர் கிண்டி பகுதி தலைவர் ஆதம்பாக்கம் பகுதி தலைவர் தேனாம்பேட்டை பகுதியின் தலைவர் மற்றும் முகப்பேர் பகுதி சார்ந்த லயன் ஜி அருள் பகுதி துணைத்தலைவர் பகுதி செயலாளர் லயன் ஏ ரேகா அபிராமி பகுதி பொருளாளர் ராஜேஷ் கே பிள்ளை பகுதி ஐடி விங் பி மனோஜ் பகுதி ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் எல் சத்யராஜ் பகுதி இணை செயலாளர்கள் பி மோகன் குமார் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?