சென்னை,ஆகஸ்.-
வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை பெரு மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்துஎரி உலைக்கு (WTE) மாற்று திட்டத்தை பற்றி எடுத்துக் கூறினர். பின்னர் செய்தியாளர்களைசந்தித்த வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின்கூட்டமைப்பு தலைவர்T. K. சண்முகம் கூறுகையில் எரிவாய்வு திட்டம் வடசென்னை பகுதியில் வேண்டாம் இதனால் அப்பகுதி மிக மோசமான உடல் பாதிப்புக்கு உள்ளாவார்கள்,இதுக்கு மாற்று திட்டமாகபசுமை சென்னை முன்னெடுப்பு என்கின்ற மாற்று திட்டத்தை நாங்கள் கூறினோம். அதனை ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக அதிகாரியிடம் பேசி நல்லமுடி வினைஎடுப்பதாக தெரிவித்தார். பசுமை சென்னை முன்னெடுப்பு மூலம்ஐந்து பகுதிகளாக மாற்றுத்திட்டம் அமைத்துள்ளது. பொது மக்களின் பங்கேற்போடும், ஒத்துழைப்போடும் ஜீரோ வேஸ்ட் நகரமாக சென்னை உருவாக்க முடியும்.ஒவ்வொருவட்டத்திற்கும் 15 பேர் என்ன 3000 தன்னாராவலர்களை விழிப்புணர்(ம)கண்காணிப்புக்கு பணிக்கு ஈடுபடுத்த வேண்டும். கழிவற்ற சென்னை என்கின்ற செயலியை உருவாக்க வேண்டும். பிரச்சனைகரமான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கும் கொள்கை முடிவுகளுக்காக இந்தியாவின் முதல் கழிவற்ற ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள். கழிவிலிருந்து உரம் தயாரித்தல்,உலர் கழிவுகளை மறு சூழ்ச்சிக்காக பிரித்தெடுக்கும் மையத்தையும் கற்றல் மற்றும் பயிற்சி மையங்களாக மாற்றிட விரும்புகிறது. ஹேப்பிஸ்ட்ரீட் கொண்டாடப்படுவது போல் ஒவ்வொரு மாதமும் கழிவற்ற நாள் கொண்டாட வேண்டும். குப்பைகளைவகை பிரிக்கும் போது ஈரக் கழிவுகள் 5160 டன், உலர் கழிவுகள் 2280 டன், நச்சு கழிவுகள் 160 டன் என தினசரி சென்னையில் 7600 டன் குப்பைகள் சேர்கிறது. பசுமை சென்னை முன்னெடுப்பு மூலம்சென்னையை உலகளவிய கழிவு மேலாண்மை சூழலின் முன்னோடியாக மாற்ற முடியும்.மேலும் இந்த மாற்றுதிட்டத்தின் மூலம் வடசென்னை விஷ நகரமாக மாறுவதுதடுக்க முடியும் என்றார்.
வடசென்னையில் எரி உலை வேண்டாம் என சென்னைபெருமாநகராட்சிமேயரை-வடசென்னை குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பினர் சந்திப்பு


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?