சென்னை அண்ணாநகர் கிழக்கு மண்டல பாஜக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கரூரில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரதமர் 75வது பிறந்த நாளையொட்டி ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதான உணவு வழங்கப்பட்டது. பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர் லதா சண்முகசுந்தரம், மண்டல தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.