உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்துக் கொள்ளுங்கள் என ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மனு கோயல் கேட்டுக்கொண்டார்
ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை, ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு மற்றும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை இணைந்து மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அரங்கத்தில் நடைபெற்றது.
இம் முகாமினை அறக்கட்டளை நிர்வாகி மனுகோயல், கே.கே.குப்தா, ஆகியோர் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமில் துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் மருத்துவர்கள் ஹரிஹரன், ருக்மணி தியாகராஜன், உஷா விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் அரங்காவலர் மனு கோயல் அவர்கள் கூறியது பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி பெண்கள் அவர்களுடைய உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் மருத்துவர் ரீதியான எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மூலம் நடைபெறும் மருத்துவ முகாமில் உங்களுடைய உடல் நலத்தை பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம் இந்த அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். மேலும் இந்த மருத்துவ முகாமினை ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai