சென்னை மேற்கு மாம்பலம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் வி.சீனிவாசன்
ஆச்சாரி தலைமையில் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமிக்கு சிறப்பான முறையில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காளிகாம்பாள் அறங்காவலர் குழுதலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் ராஜேந்திரன், ஜே.ஆர். ரமேஷ், ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஸ்ரீ மகாவிஸ்வகர்மா விருதினை தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளருமான நாமக்கல் டாக்டர் எஸ் முத்து ரட்சகன் அவர்கள் கலந்து கொண்டு விருதினை வழங்கி கௌரவத்தினர் மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னை உட்பட ஸ்ரீ விஸ்வகர்மா முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சங்கத்தின் செயலாளர் ஆர்.சுப்பிரமணி ஆச்சாரி, பொருளாளர்ஏ. சண்முகசுந்தரம் ஆச்சாரி, துணைத் தலைவர்கள்டி.தங்கராஜு ஆச்சாரி, வி.வெங்கடேஷ் ஆச்சாரி, துணைச் செயலாளர்கள் பி.பிரபாகரன் ஆச்சாரி, கே பாலமுருகன் ஆச்சாரி,சங்க ஆலோசர்கள் எம்.ராமு ஆச்சாரி, கே. மோகன் ஆச்சாரி மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai