சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தின் புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழா 23.11.25 மாலை 5.30 மணி அளவில் நடைபெற
உள்ளது.
இது தொடர்பாக பங்குத்தந்தை பாதர் கிறிஸ்டிராஜ் செய்தியாளர்களிடம்தெரிவிக்கையில்
இந்த அற்புத குழந்தை இயேசு அற்புத ஆலயம் சுமார்40 ஆண்டு பள்ளிக்கரணை பகுதியில் கிருத்துவ மக்களுக்கும்,பிற மக்களுக்கும் அருளாசி பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் 24.4.2022 ஆலயத்தை புதுப்பிக்கும் பணி செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் முனைவர் மேதகு ஆயர்டாக் .நீதிநாதன்,சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அற்புதக் குழந்தை இயேசு தலத்தை சேர்ந்த முக்கிய மானவர்கள் முன்னிலையில் ஆலய கட்டுமான பணி துவங்கப்பட்டது.
ஆலய கட்டுமானபணி 3ஆண்டுகளில் நிறைவந்த நிலையில் 23.11.2025 ஞாயிறுமாலை5.30 அளவில் அர்ச்சிப் பெருவிழா நடைபெற உள்ளது.
இதனை செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் மேதகு நீதிநாதன், வேலூர் மறைமாவட்ட டாக்டர் பி.அன்பு ரோஸ் ஆண்டகை, மயிலாப்பூர் மறை மாவட்டத்தின் மேனன் பேராயர் டாக்டர் மேதகு ஏ.எம்.சின்னப்பா ஆகியோர் அச்சிப்பு பெருவிழா நடத்த உள்ளனர் என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் உதவி பங்குத்தந்தை பாஸ்கர், அருட் சகோதரர் ரீகன் OMI மற்றும் தேவாலயத்தின் பங்கு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai