சென்னை கோட்டூர்புரம் வித்யாசாகர் அரங்கில் மாற்றுத் திறனாளிகள் வங்கி ஊழியர்கள் நல சங்கத்தின் முதல் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் யூனியன் வங்கியின் மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் (UBDASWA) முதல் முக்கூட்டு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த பொதுக்குழுவில் முக்கிய 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஏ. ஜி. அனூப். எஸ் பி ஐ , பொதுச் செயலாளர் பி. பாலமுரளி கிருஷ்ணா யூனியன் பேங்க் ஆகியோர் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் மாற்றுத்திறனாளி வங்கி ஊழியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவர்களுக்கு ஏற்ற சிறப்பு இடமாற்றம் செயல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல சங்கங்களை உருவாக்குவதற்கு வங்கியில் அங்கீகார வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.
மேலும் வங்கிகள் தங்கள் மாற்றுத்திறனாளிகள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உதவியாளர்களை அனுமதிக்க வேண்டும்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் ஊழியர்களுக்கு தனி குறை தீர்க்கும் வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதன் ஊனமுற்ற ஊழியர்களுக்கான சிறப்பு போக்குவரத்துக் கொடுப்பனவு கூடுதலாக வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்ல பார்வை குறைபாடு உள்ள வாடிக்கை யாளர்களுக்கு பிரெய்லி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு அறிமுகம் செய்ய வேண்டும்.
வங்கியில் பணிபுரியும் ஊனமுற்ற ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை ஒரு பொதுவான தளத்தில் வெளியிட வேண்டும்.
மேலும் வங்கியின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்.
அதேபோல் மாற்றுத் திறனாளி அதிகாரிகள் மாலை 6 மணிக்கு முன்பாக அலுவலகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும், இதுபோல் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறுவப்பட்டன.
மேலும் எங்களுடைய சங்கத்தில் அகில இந்திய அளவில் 6000 பேர் உறுப்பினர்கள் உள்ளார்கள் என தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில்
திருமதி கிறிஸ்டி லில்லி பாபு ஐ.ஓ.பி., திரு வேல்முருகன். ஐ ஓ பி, திரு சக்திவேல்.பேங்க் ஆப் மகாராஷ்டிரா, திரு வி.கிருஷ்ணமூர்த்தி. முன்னால் பொதுச் செயலாளர் விபேவா, திரு அஜித் குமார் J T எஸ் பி ஐ ஆகியோர் கலந்து கொண்டனர்.
.இந்த பொதுக்குழுவிற்கு அனைத்து அரசு வங்கியில் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் .


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?