சென்னை கோபாலபுரத்தில் உள்ள கீதா பவன் திருமண மண்டபத்தில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மனு கோயல் தலைமையில் நடைபெற்றது.
மேலும் தொடர்ந்து ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 6 .12. 2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மேலும் அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மனுகோயல் கூறியது தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச திருமண நிகழ்ச்சி நடத்தி வைத்தல் மேலும் இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அறக்கட்டளை பல்வேறு நன்மைகள் செய்து வருவதாக கூறினார். மேலும் அனைவரும் கண்தானம் மற்றும் ரத்த தானம் செய்திட வேண்டும் எப்போதும் பிறருக்கு உதவி செய்கின்ற உயர்ந்த எண்ணத்தோடு நாம் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் இதில் மருத்துவக்குழுவை சேர்ந்தவர்கள் கிட்டப்பார்வை – தூரப்பார்வை, கண்அழுத்தம், விழித்திரை பாதிப்பு, கண்ணில் சதை வளர்ச்சி, நீர்வழிதல், நீர் அழுத்தம் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் இங்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது தொடர்ந்து கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சங்கர நேத்ராலயா மருத்துவமனையில், அறுவைசிகிச்சை, தங்குமிடம், உணவு, மற்றும் மருத்துவம் அனைத்தும் இலவசமாக செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மனுகோயல், முராளிலால் சந்தோலியா, கே.கே. குப்தா மற்றும், மருத்துவர் ஹரிஹரன் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai