சென்னை மயிலாப்பூரில் உள்ள அமர ஜிவி பொட்டி ஸ்ரீ ராமுலூ நினைவு இல்லத்தில் அவர்களின் 73 ஆம் ஆண்டு நினைவு நாளில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனி ஆறுமுகம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் தமிழ்நாடு தெலுங்கு பீப்பிள் சொசைட்டி தலைவர் தேவரகொண்ட ராஜு காசிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அமர ஜிவி பொட்டி ஸ்ரீ ராமுலூ அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனி ஆறுமுகம் அவர்கள் கூறியது ஐயா பொட்டி ஸ்ரீ ராமுலூ மொழி வழி மாநிலத்திற்கு 52 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மொழிக்காக தன் உயிரே நீதாதார் அவர் அனைவருக்கும் சமமான ஒரு சிறந்த மாமனிதர் மொழிக்காக பல போராட்டம் பல கஷ்டங்களை அனுபவித்து அவர் செய்திட்ட செயல்கள் அளவற்றவை அவருடைய நினைவு நாளில் மரியாதை செலுத்த நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறினான் தொடர்ந்து தெலுங்கர்கள் வந்தேறி என்று கூறிவரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நாம் தமிழர் நிர்வாகிகளுக்கு தனது கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் தமிழ் தெலுங்கு என்று பிரிவினை உருவாக்கும் சீமான் அவர்கள் இந்த நாட்டிற்காக ஜாதி மதம் மொழி இனம் வேறுபாடு இன்றி உழைத்தவர்கள் தெலுங்கு சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் குறிப்பாக போட்டி ஸ்ரீ ராமலூ தொடர்ந்து மொழிக்காகவும் தன்னுடைய தேச மக்களின் நலனுக்காகவும் பாடுபட்ட ஒப்பற்ற தலைவர் திரு பொட்டி ஸ்ரீ ராமுலூ ஆவார் அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் என்றும் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என தெரிவித்தார். அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கின மக்களை பிரித்துப் பார்க்கும் சீமான் போன்றவர்கள் பேசி வருவது கண்டனத்திற்குரியதாகவும் இனி அதுபோன்று பேசினால் தக்க பதிலடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai