மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தமிழக பாஜக ஆன்மீகப் பிரிவு மாநிலச செயலாளர் ப்ரீத்தி சாய் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் ஷெல்வீ கே.தாமோதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் திரு வாஜ்பாய் அவர்கள் அவர் ஆட்சிக் காலத்தில் இந்திய நாட்டிற்காகவும் ஏழை எளிய மக்கள் நலனுக்காகவும் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் அதேபோன்று இந்தியா முழுவதும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைத்திட்ட மாபெரும் தலைவர் திரு வாஜ்பாய் அவர்கள் என புகையாரும் கூட்டினார்
தொடர்ந்து சாய்பாபா சுவாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்களுக்கு இனிப்பினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் சங்கமேஸ்வரன் (எ) சங்கர், தென்சென்னை மாவட்ட தலைவர் கே.ராமநாதன், மாவட்ட துணை தலைவர் சத்ய நாராயணன், மகளிர் அணி மாவட்ட தலைவி சாந்தகுமாரி, அலுவலக செயலாளர் பாலகிருஷ்ணன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் துலுக்காணம், கோடம்பாக்கம் பகுதி செயலாளர் பி.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?