26 .01 .2026 திங்கள் அன்று மதியம் ஆவின் மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள அன்னதான சமாஜம் அரங்கில் சிறப்புக்கூட்டமும் அதனைத்தொடர்ந்து ஆவினில
பணிபுரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் சிவகாமசுந்தரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாணிக்கவல்லி வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினராக B Vanitha DGM ( Finance ) அவர்களும் புலவர் கலியன் சம்பத்தும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.கவி அரங்க நடுவர்களாக புலவர் கலியன் சம்பத்தும் புலவர் நாகராஜனும் இணைந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் கவிதைப்போட்டி நடத்தி போட்டியில் பங்கு கொண்ட அனைவரும் அருமையாக கவிதை படித்ததாக பாராட்டினர். ADZAP எனும் விளம்பர போட்டியை வைதேகி, ரமாநாராயணன் இருவரும் சிறப்பாக நடத்தினர். மற்றும் இசைநாற்காலி எலுமிச்சம்பழம் ஸ்பூனில் எடுத்துவருதல் பாட்டுக்கு பாட்டு ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் சிவகாமசுந்தரியுடன் துணைத்தலைவர் மாணிக்கவல்லி செயலாளர் கல்பளா பொருளாளர் ரேவதி இணைப்பொருளாளர் பிரசில்லா இணைச்செயலாளர்கள் தாட்சாயணி சுஜீதா செல்வராணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜஶ்ரீ ஈஸ்வரி தீப சௌந்தரி சுசீலா அர்ச்சனா ஹேமலதா ஆகியார் சிறப்பாக பணியாற்றினர்.
ஆவின் மகளிர் நல சங்கத்தின் தலைவர் சிவகாமசுந்தரி அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் உலக மகளிர் தினம் 9.3.2026 அன்று சென்னை தியாகராய நகர் நகர் பசும்பொன் தேவர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் பரிசுகளும் கோப்பைகளும் மாண்புமிகு பால்வள அமைச்சர், நிர்வாக இயக்குநர் , இணைநிர்வாக இயக்குநர், பொதுமேலாளர் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கப்படும் எனவும் இந்த ஆண்டு 24 ஆம் ஆண்டு மகளிர்தின விழா அடுத்த ஆண்டு வெள்ளி விழா இதைவிட மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிவித்தார். மேலும் மகளிர் தின விழாவில் ஆண்டுதோறும் முதியோர் இல்லம், மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பாதுகாப்பு இல்லம் போன்ற பல இல்லங்களுக்கும், விழி பார்வை திறன் இழந்தவர்களுக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும் பல உதவிகள் செய்யப்ப படுவதாகவும், எங்கள் சங்க உறுப்பினர்கள் இதற்கு மனமுவந்து உதவிகள் செய்து வருவதாகவும், அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்விற்கு பொருளாளர் ரேவதியும் இணைப் பொருளாளர் பிரசில்லாவும் இணைந்து நன்றியுரை வழங்கினர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai