
போரூர்
; ஸ்ரீ இராமச்சந்திராவிலுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி நிலையமான வித்ய சுதாவில் விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளா; திருமதி S. மதுமதி, அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் வாயிலாக சிறப்பு குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரிகளில் 5 சதவிகித ஒதுக்கீடும் வேலை வாய்ப்புகளில் 4 சதவிகிதமும் அளித்து வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பெற்றோர்களும், சிறப்பு ஆசிரியர்களும் தேவையான திறன் பயிற்சியும், வழி நடத்தலும் இந்த குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். சிறப்பு குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை கண்டுபிடித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகரான திரு. சந்தானம் பேசுகையில் சமூக பொறுப்புடன் 22 வருடங்களாக சிறப்பு குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை, கல்வி, திறன் பயிற்சியை அளித்து வரும் ஸ்ரீ இராமச்சந்திரா நிறுவனத்தை பாராட்டினார்.
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள்;துறை அங்கீகாரம் பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான மையமாக இது விளங்குகிறது. இதில் எட்டு வயதிற்குள் உள்ள அறிவாற்றல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் கொண்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகள் அடங்கிய குழுவுடன் கூடிய சிறப்பு சேவை அளிக்கப்படுகிறது.
ஆட்டிசம், வளர்ச்சி குறைபாடு, தசை இயக்க பாதிப்பு, அறிவுசார் குறைபாடு போன்ற பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது. இந்த மையத்தில் குழந்தைகள் மருத்துவர்கள், சிறப்பு ஆசிரியர்கள், செயல்முறை சிகிச்சை நிபுணர்கள், கேட்பியல் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், மருத்துவ உளவியலாளர்கள், கண் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் அடங்கிய குழு சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.
இந்த மையத்தில் பயின்ற குழந்தைகள் தற்போது சாதாரண குழந்தைகள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில்; சேர்ந்து கல்வி கற்று வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மரம் நடுதல், சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், சிறப்பு குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவத்ற்கும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், சமூகத்தில் ஒரு அங்கமாக மாறவும் வழிவகை செய்வதாகும். சிறப்பு குழந்தைகளை முன்னதாகவே அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் இருந்தது.
வேந்தர் திரு. ஏ.சு. வெங்கடாசலம் மற்றும் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி. சம்யுக்தா வெங்கடாசலம், சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் அமைப்பின் பொது செயலாளர் திரு. மு. பிரபாகரன், துணைவேந்தர் Dr. உமாசேகர், பதிவாளர் Dr. S. செந்தில்குமார், இணை துணைவேந்தர் Dr. மகேஷ் வக்கமுடி மற்றும் வித்யசுதா கல்வி நிலைய நிர்வாகி Dr. அருண் அலோசியஸ் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
MGM Healthcare Performs Chennai’s First Spinal Cord Stimulation, Helps Restore Hand Movement in Road Accident Survivor
Introducing DEKA’s ONDA PRO with Patented Coolwaves® Technology at Dr. Prasanthi G’s Halos Clinic, Chennai
MGM Cancer Institute Uses Vacuum-Assisted Technique to Remove Breast Lump, Preserving Natural Breast Appearance