சென்னை மாவட்டம் 3234 ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ், ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் மற்றும் “அநியு”அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் எண்ணத்தில் 27 பிங்க் ஆட்டோக்களை இன்று அம்பத்தூரில் உள்ள “ஐமா” அரங்கில் வழங்கியது.
இந்த ஆட்டோக்கள் ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் நிதி உதவியுடன், “அநியூ” தொண்டு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 27 பெண் பயனாளிகளுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ் மூலம் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் மற்றும் திரு ஆனந்தன், ரொட்டேரியன் பத்மா ஆனந்தன் தம்பதியர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி மாவட்டம் 3234 கவர்னர் ரொட்டேரியன் D. சுரேஷ் ஜெயின், “அநியூ’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் அன்னலகட்சுமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ் தலைவி ரொட்டேரியன் மல்லிகா தியாகராஜன், செயலாளர் ரொட்டேரியன் சிங்காரவேல் கம்யூனிட்டி சர்வீஸ் டெவலப்மென்ட் டைரக்டர் ரொட்டேரியன் பாலசுந்தரம், அசிஸ்டெண்ட் கவர்னர் ரொட்டேரியன் தருன் அகர்வால், ஆப்டஸ் நிறுவன சமூக பொறுப்பு துறையின் பிரதிநிதிகள் திரு.தயாநிதி மற்றும் முரளி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைந்து வழிநடத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் திரளாகக் கலந்து கொண்டு இந்த சிறப்பான திட்டத்தைப் பாராட்டினர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?