சென்னை மேற்கு மாம்பலம் ஏரிக்கரை தெருவில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தேசப்பிதா காந்தி மகான் 156 வது பிறந்தநாள் விழா மற்றும் மாண்புமிகு பாரத பிரமர் நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்தநாள் விழா அமைதி பேரவையின் சார்பில் கொண்டாடப்பட்டது மேலும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலை சிற்றுண்டியை அமைதிப் பேரவையின் நிறுவனத் தலைவர் கவிஞர் பூ செ செ நித்தியானந்தம் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த நித்தியானந்தம் அவர்கள் கூறியது இன்றைய தினம் அகிம்சை தினமாக கடைபிடிக்கப் படுகிறது தேச பிதா காந்தி மகான் கத்தியின்றி ரத்தம் இன்றி அஹிம்சை வழியில் மக்கள் ஆதரவுடன் சத்தியாகிரகப் போராட்டங்கள் நடத்தி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் எந்த ஒரு தேசத் தலைவருக்கும் ஐந்து முறை நோபல் பரிசு விண்ணப்பிக்கப் பட்டு,பரிசீலிக்கப்பட்டதில்லை ஆனால் திரு மகாத்மா காந்தி அவர்களுக்கு நோபல் பரிசு வழங்க இருந்த வருடத்தில் அவர் இன்னுயிர் நீத்தார் அதனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை எனினும் அந்த வருடம் யாருக்குமே வழங்கப்படவில்லை இதுவே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்கு சமம் தற்போது உலக நாடுகள் மட்டுமல்ல சச்சரவு இல்லாத வீடுகளும் இல்லை என்ற நிலை உள்ளது இல்லறம் நல்லறம் என்பது எல்லாம் இல்லாமல் போய்விட்டது. எனவே நாம் குடும்பத்தில் சகிப்புத்தன்மை யுடனும் விட்டுக் கொடுக்கும் தன்மையோடும் வாழ்வதே நாம் காந்தி மகானுக்கு செலுத்தும் மிகப்பெரும் மரியாதையாகும் என்று தெரிவித்தார் மேலும் கர்ம வீரர் காமராஜர் காலத்தில் அதிகமான பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பசி படிப்புக்கு தடையாக இருக்கக் கூடாது என்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கிய மாபெரும் தலைவர் திரு கர்மவீரர் காமராஜர் என புகழாரம் சூட்டினார்.
எனவே கல்விக்கண் திறந்த காமராஜர் அவர் வழியில் நம்மால் முடிந்த அளவிற்கு ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க உதவி செய்ய வேண்டும் இதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றி கடனாகும் மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின் மூன்றாம் உலகப்போர் ஏற்படக்கூடாது உலக நாடுகளுக்குள் போர் வரக்கூடாது என்று ஐநா சபை உருவாக்கப்பட்டது ஆனால் ஐநா சபை அமைதி குழு என்ற எந்த ஒரு குழுவும் ஏற்படுத்தவில்லை சட்டமாகவும் இயற்றப்படவில்லை ஆகையால் இன்றும் உலக நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது உலக மயமாக்கல் காரணமாக உலகம் முழுவதும் பரந்து விரிந்து வியாபாரம் நடைபெறுகிறது ஆனால் எங்கோ ஒரு மூலையில் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையினால் இவ்வுலகத்தில் வாழும் சாமான்ய மனிதனும் பாதிக்கப்படுகிறான் இந்நிலை மாற வேண்டும் தற்போதைய கருத்துக்களின் படி உலகத் தலைவர்களில் பலம் மிக்க தலைவராக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திகழ்கிறார் அவர் மேலும் இந்தியாவை ஆண்ட முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நீண்ட நாள் ஆண்ட பிரதமர் சாதனையை முறியடித்துள்ளார் நேருவின் சாதனையையும் மிஞ்சுகின்ற மாபெரும் தலைவராக தற்போது நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விலங்குகின்றார் அவர் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றும் இவ்வுலகில் அமைதியை நிலை நாட்ட உலக நாடுகளுக்கு இடையே போர் இல்லாமல் இருக்க உரிய தீர்வு நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக அமைதிக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தனது இரு கரங்கள் உயர்த்தி கேட்டுக் கொண்டார்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai